கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்த இளம் பெண்ணை, ஆம்புலன்ஸ் ஒட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பதானம் திட்டாவில் உள்ள அரண்முலா பகுதியில், இளம் பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, அந்த  இளம் பெண், கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், நேற்றைய தினம், உயர் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ப்ரண்ட்லைன் சிகிச்சை மையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். அப்போது, குறிப்பிட்ட அந்த ஆம்புலன்ஸில் 2 இளம் பெண்கள் இருந்து உள்ளனர்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் 2 பெண்களையும் அழைத்துக்கொண்டு புறப்பட்ட ஆம்புலன்ஸ் ஒட்டுநர், அதில் ஒரு பெண்ணை அந்த பகுதியில் உள்ள கோழஞ்சேரி மருத்துவமனையில் இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து மற்றொரு பெண்ணுடன், அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சென்றுள்ளார். 

அங்கிருந்து கிளம்பிய அந்த ஆம்புலன்ஸ் ஒட்டுநர், குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் செல்லாமல், மாற்று வழியில் அங்கிருந்து நேராக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு காளியான இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஆட்கள் நடமாட்டம் யாரும் இல்லாத நிலையில், வாகனத்தில் இருந்த கொரோனா பாதிக்கப்பட்டிருந்த பெண்ணை, பலவந்தமாக அந்த ஒட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், இந்த பாலியல் பலாத்கார விவகாரத்தை வெளியே யாரிடமாவது சொன்னால், “உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்றும், அவர் மிரட்டி உள்ளார்.

இதனையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த ஒட்டுநர், குறிப்பிட்ட ப்ரண்ட்லைன் சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே இறக்கி விட்டுள்ளார்.

ப்ரண்ட்லைன் சிகிச்சை மையத்திற்குள் நுழைந்ததும், “என்னை அந்த ஆம்புலன்ஸ் ஒட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, கொலை மிரட்டல் விடுத்தார்” என்று, அந்த மருத்துவனை ஊழியர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். ஆனால், அதற்குள், அந்த ஆம்புலன்ஸ் ஒட்டுநர் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார்.

இது குறித்தது மருத்துவமனை நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கிரிகாட் நவுபலை விரட்டிச் சென்று அதிரடியாகக் கைது செய்தனர். 

இதனையடுத்து, இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததால், அவருக்கும் அந்த தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கருதி, அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, அந்த ஆம்புலன்ஸ் ஒட்டுநரை 14 நாட்கள் தனிமையில் அடைத்து வைத்தனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் பாதித்த இளம் பெண்ணை, ஆம்புலன்ஸ் ஒட்டுநர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.