74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி எழுச்சி உரை ஆற்றினார். 

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். முன்னதாக, டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்று, பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். அதன் தொடர்ச்சியாக நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்த பின், நாட்டி மக்களிடம் பிரதமர் மோடி எழுச்சி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்” என்று, சூளுரைத்தார்.

“கொரோனாவுக்கு எதிராகப் போராடும் முன்களப் பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி” என்று தெரிவித்த பிரதமர் மோடி, “சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது அனைத்திற்கும் அடிப்படையானது” என்றும் கூறினார்.

குறிப்பாக, “நாட்டின் 75 வது சுதந்திர தின விழா, இன்னம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்றும், இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்” என்றும், பெருமையோடு குறிப்பிட்டார்.

“இந்திய விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர் என்றும், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்” என்றும், வலியுறுத்தினார்.

“விவசாயிகளின் செலவுகளைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், விவசாய தயாரிப்புகளைப் பன்னாட்டுச் சந்தைக்குக் கொண்டு செல்ல வேண்டும்” பிரதமர் மோடி, வலியுறுத்தினார்.

“மக்கள் மனதில் நிலைக்க வேண்டியது, உள்நாட்டு பொருட்கள், உள்நாட்டு முன்னேற்றம்” என்றும், இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்” என்றும், பிரதமர் மோடி சூளுரைத்தார்.
 
“நம்முன் பல்வேறு சவால்கள் உள்ளதாகவும், அவற்றைத் தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடமே உள்ளது” என்றும், பிரதமர் மோடி எழுச்சி உரையாற்றினார்.
 
“வங்கித்துறை முதல் விண்வெளித்துறை வரை, பல்வேறு புதுமைகளைப் புகுத்தியுள்ளோம் என்றும், உள்ளூர் தயாரிப்புக்குக் குரல் கொடுப்போம் என்பதே நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம்” என்றும், பிரதமர் மோடி உறக்க கூறினார்.

மேலும், “ உலகை வழிநடத்தக் கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும்” என்றும், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நம்பிக்கை ஊட்டினார்.

“இன்று நிலையில், உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன என்றும், ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்று பல வழிகளில் இந்தியா முன்னேறுகிறது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

“கொரோனா காலத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும், நாட்டின் எந்த ஒரு பகுதியும் பின்தங்கிவிடக்கூடாது” என்பதில், கவனமாக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

“இந்தியாவில் முன்பு வென்டிலேட்டர்கள் இல்லாமல் இருந்தன. தற்போது அதனைத் தயாரிக்கிறோம் என்றும், கொரோனா காலத்திலும் இந்தியாவில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தன்னிறைவு மூலம் எட்டப்படும் என்றும், தன்னிறைவு இந்தியா என்ற லட்சியம் விரைவில் மெய்ப்படும்” என்றும், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி நம்பிக்கை ஊட்டினார்.

“நாட்டில் வங்கிகளின் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயக் கடன்களை எளிதாக வழங்க முடியும் என்றும், 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவில் உள் கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது” என்றும், பிரதமர் மோடி கூறினார்.

அத்துடன், “கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கொரோனாவுக்கு எதிரான 3 தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளதாகவும்” பிரதமர் மோடி தெரிவித்தார்.

“அடுத்த 2 ஆண்டுகள் எப்படி முன்னேற வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும், நமது கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு மிகப்பெரும் வரலாறு உள்ளது என்றும், தன்னிறைவு இந்தியா என்ற கனவு மிக விரைவில் நிறைவேறும்” என்றும், நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி எழுச்சி உரை ஆற்றினார்.