5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை இன்று முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டு உள்ளது. மொத்தம் 18 நாட்கள் கூட்டம் இது நடைபெறும் என்று கூறப்பட்டது.

முதல் நாளான இன்று மக்களவை கூட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெற்றது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று வருகை தந்திருந்த போது, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, கொரோனா முடிவுக்கு வரும் வரை அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர், ``கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும். உலகின் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் சோதனைகளை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.

நாடு ஒன்றுபட்டு இந்திய ராணுவ வீரர்களுக்கு வலிமை அளிக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எம்பிக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

முன்னதாக கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி மார்ச் 2021-க்குள் தயாராகும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் கிருஷ்ணன் நாயர் தெரிவித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில், "2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி (COVID-19 vaccine) தயாராக இருக்கும், ஆனால் இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லை" என்றார். 

மேலும் அவர் கூறுகையில், ``கொரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டால் அதை நிரூபிக்க நானே முதல் ‘டோஸ்’ தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவேன் என அவர் கூறினார். தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கென்று தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும் அது 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் (வரும் மார்ச் மாதத்துக்குள்) தயாராகி விடும்" என்றார்.