பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படம் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் இரண்டு நாள் முன்பு வெளியானது. பொங்கலையொட்டி வெளியான இந்த படத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் அடுத்தடுத்த நாளுக்கான முன்பதிவும் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகமெங்கும் ரசிகர்களின் பேராதரவோடு வெளியான வாரிசு படத்தில் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெய சுதா, சரத்குமார், ஷாம், சங்கீதா, யோகி பாபு, விடிவி கனேஷ், சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள 'Celebration Of Varisu ' பாடலை வெளியிட்டது படக்குழு. குடும்பங்களுடன் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் இசையமைப்பாளர் தமனின் அசத்தலான பீட்டிற்கு கேட்சியான வரிகளை எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேக். மேலும் ஷோபி மாஸ்டரின் நடன வடிவமைப்பில் விஜய் வேறு மாதிரியான எனர்ஜியுடன் துள்ளலான நடனத்தை வெளிபடுத்தியிருக்கிறார். சிறு சிறு தொகுப்பாக விஜய் நடனங்களையும் படக் காட்சியினையும் சேர்த்து லிரிக் வீடியோவாக வெளிவந்துள்ள பாடல் ரசிகர்களிடம் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

விஜயின் துள்ளலான இசை கொண்ட பாடலுக்கே தனி ரசிகர்கள் உள்ளனர், வாரிசு படத்திற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்திலும் இசையை பெரும்பகுதியாய் வைத்து உருவாக்கபட்ட ‘வாத்தி கம்மிங்’ பாடல் இடம்பெரும். அந்த பாடல் வெளியானதையடுத்து உலகளவில் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலின் இசைக்கு விஜயின் நடனம் அதிகளவு பேசப்பட்டது. அதே எனர்ஜியையும் அதே குதூகலத்தையும் கொடுக்க கூடிய விதமாக 'Celebration Of Varisu' வெளியாகிவுள்ளது. நிச்சயம் இந்த பாடல் திரையரங்குகளின் ரசிகர்களின் ஆட்டம் போட வைக்கும்.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் குடும்பங்களின் உணர்வை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்தின் இந்தி டப் இன்று வெளியானதையடுத்து தெலுங்கு டப் 'வாரிசுடு' நாளை வெளியாகவுள்ளது. தமிழில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வாரிசு திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாள் முடிந்தும் இன்னமும் கொண்டாட்டங்கள் குறையாமல் திரையரங்குகள் நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'Celebration Of Varisu' பாடல் தான் இப்போது ரசிகர்களிடம் டிரென்ட்