பல கோடி தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவரான தளபதி விஜயின் மேலாளராக அவருடன் நீண்ட காலமாக உடன் இருப்பவர் திரு.ஜெகதீஷ். விஜயின் மேலாளராக மட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்தை இணை தயாரிப்பாளராக தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தனது தயாரிப்பில் முதல் படைப்பாக ஜெகதீஷ் தயாரிப்பில் மலையாளத்தில் தயாராகியுள்ள திரைப்படம் சேஷம் மைக்கில் ஃபாத்திமா. தென்னிந்திய சினிமாவின் பிரபல இளம் கதாநாயகியாக வலம் வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கும் சேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தை இயக்குனர் மனோ.C.குமார் இயக்கியுள்ளார்.

தயாரிப்பாளர் ஜெகதீஷின் The Route மற்றும் தயாரிப்பாளர் சுதன் சுந்தரத்தின் PASSION STUDIOS இணைந்து தயாரிக்கும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியிருக்கும் சேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவில், கிரண் தாஸ் படத்தொகுப்பு செய்ய, ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைக்கிறார்.

சேஷம் மைக்கில் ஃபாத்திமா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் சேஷம் மைக்கேல் ஃபாத்திமா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…