தளபதி விஜய் ரசிகர்கள் எதிர்பாராத வகையில் புதிய சர்ப்ரைஸ் ஒன்றை தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த தளபதி விஜய் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த லியோ திரைப்படம் இன்று நவம்பர் 24ஆம் தேதி இந்தியாவிலும் வருகிற நவம்பர் 28ஆம் தேதி உலக அளவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் & ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இந்தியாவில் லியோ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. பக்கா அதிரடி புகைப்படம் திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட லியோ திரைப்படத்தை தற்போது OTTயிலும் கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக தற்போது லியோ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான நிலையில், ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விரைவில் லியோ திரைப்படம் ஆங்கிலத்திலும் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக நவம்பர் 28ஆம் தேதி உலக அளவில் லியோ திரைப்படம் வெளியாகும் போது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்ட வெர்ஷன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா சௌத் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் அண்ணன் வரார் வந்துட்டார் வழி விடு… இவர் ஆர்டினரி பர்சனா இல்லை BADASSஆ என கண்டறியும் நேரம் இது... இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் & ஹிந்தி மொழிகளில் இந்தியாவில் வெளியாகி உள்ளது விரைவில் ஆங்கிலத்திலும்…” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவு இதோ...

மாஸ்டர் படத்திற்கு பின் இரண்டாவது முறை இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் தளபதி விஜயுடன் இணைந்து த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

ஆரம்பம் முதலே பாக்ஸ் ஆபிஸில் அதிரடி காட்டிய லியோ திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிகபட்ச வசூல் செய்த படமாக 148.75 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை செய்தது. தொடர்ந்து கொண்டாடப்பட்ட லியோ திரைப்படம் முதல் வாரத்தில் 461 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவிலேயே முதல் வாரத்தில் அதிகபட்ச வசூல் செய்த படமாக மற்றொரு வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை மொத்தமாக 600 கோடிகளுக்கு மேல் வசூலித்திருக்கும் லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. மேலும் வெளிநாடுகளிலும் 201 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த தமிழ் படம், தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம், தமிழ்நாட்டில் முதல் 100 கோடி ரூபாய் பகிர்வு செய்த படம், என்ற மிகப்பெரிய வரலாற்று பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்தது.