'லியோ' தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் திருமண வரவேற்பிற்கு வந்த தளபதி விஜய்... சோசியல் மீடியாவை அதிரவிடும் புகைப்படங்கள் & வீடியோ இதோ!

லியோ தயாரிப்பாளரின் மகன் திருமண வரவேற்பிற்கு வந்த தளபதி விஜய்,thalapathy vijay attends leo producer lalit kumar son wedding reception | Galatta

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து இந்திய அளவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டான லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களின் மகன் திருமண வரவேற்பிற்கு தளபதி விஜய் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். முன்புறம் ஒயிட் பின்புறம் பிளாக் என அட்டகாசமான ஸ்டைலில் சட்டை அணிந்து வந்து இந்த அழகிய நிகழ்வில் கலந்து கொண்ட தளபதி விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய ட்ரெண்டாகி வருகின்றன. இந்த நிகழ்வில் தளபதி விஜய் அவர்களுடன் அவரது மேலாளரும் லியோ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் ஆகியோரும் உடன் இருந்தனர். தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களின் மகன் திருமண வரவேற்புக்கு தளபதி விஜய் வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இதோ…

 

Nee Singam Dhan 🤍🌟@actorvijay #ThalapathyVijay #Thalapathy68 #Leofilm #Leo #Galatta pic.twitter.com/1SBqnS7QRy

— Galatta Media (@galattadotcom) November 23, 2023

Latest Pictures of Thalapathy Vijay 🔥@actorvijay #ThalapathyVijay #Thalapathy68 #Leofilm #Leo #Galatta pic.twitter.com/np9n0Mv03m

— Galatta Media (@galattadotcom) November 23, 2023

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 2வது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் குமார் உடன் தளபதி விஜய் இணைந்த லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக ரிலீஸ் ஆனது. இதுவரை தளபதி விஜய் திரைப்படங்களிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் விளையியோ திரைப்படத்தை பட குழுவினர் வெளியிட்டனர் மிரட்டலான அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்த லியோ திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்து பெரும் வெற்றி பெற்றது. மொத்தமாக பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிகளுக்கும் மேல் வசூலித்திற்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக புதிய சாதனையை படைத்திருக்கிறது வெளிநாடுகளிலும் 200 கோடிகளுக்கும் மேல் வசூலித்து அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற மற்றொரு இருக்கிறது வரலாற்று சாதனையையும் லியோ படம் படைத்திருக்கிறது.திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட தளபதி விஜயின் லியோ திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இன்று நவம்பர் 24 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஒளிபரப்பாகிறது.

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தளபதி விஜய் தனது 68வது திரைப்படமாக உருவாக்கும் தளபதி 68 திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பக்கா எண்டர்டெயினிங்க் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல்முறையாக தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட தளபதி 68 திரைப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்றது. விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக தயாராகும் தளபதி 68 திரைப்படத்தின் ஒரு மிரட்டலான அதிரடி காட்சி தாய்லாந்தில் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் தொடர்ச்சியாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.