எழுத்தாளர் ஜெயமோகன் துணைவன் சிறுகதையை தழுவி இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் திரைப்படம் விடுதலை. இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் பீரியட் திரைப்படமாக உருவாகியிருக்கும் விடுதலை படத்தின் முதல் பாகம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் விடுதலை படம் பார்க்க அட்டகசாமான 6 காரணங்கள் இதோ..

வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் மேலும் ஒரு வித்யாசமான கதைக்களம். இதுவரை எடுத்த படங்கள் எதுவுமே மக்களிடம் ஏமாற்றத்தை சந்தித்தது கிடையாது. விடுதலை திரைப்படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வெற்றிமாறன் ஒரு மிகப் பெரிய காரணம்.

ஜெயமோகன் - துணைவன்

இயக்குனர் வெற்றிமாறன் ஒரு சிறந்த வாசகர். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு அதை திரைப்படமாக கொடுத்து வெற்றி காண்பவர். அதன்படி Lock Up நாவலை தழுவி விசாரணை, அதே போல் பூமணியின் வெக்கை நாவலை தழுவி அசுரன் திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படங்களும் விருதுகளையும் வசூல்களையும் குவித்தது. மேலும் வெற்றிமாறன் அஜ்னபி, நா முத்துகுமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் போன்ற கதைகளில் படமாக்க முயற்சி செய்து வருகிறார். அதன் வரிசையில் தமிழில் பிரபல் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி உருவாகியுள்ள இந்த படமும் நிச்சயம் மக்களை திருப்தி படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கதையின் நாயகனாக சூரி

இதுவரை தமிழில் நகைச்சுவை நடிகராக பார்த்து வந்த சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் விடுதலை. குறிப்பாக நகைச்சுவை இல்லாத சீரியஸான கதைக்களத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு மேலும் ஆர்வத்தை கூட்டியுள்ளது. மேலும் பல ஆபத்தான ஸ்டன்ட் காட்சிகளிலும் சூரி தனது கடின உழைப்பை கொடுத்துள்ளதை டிரைலர் மற்றும் முன்னோட்டங்கள் மூலம் பார்க்க முடிகிறது.

வாத்தியாராக விஜய் சேதுபதி

சிறந்த கதைக்கு சிறந்த கதாபாத்திரம் என்று உதாரணாமாக எடுத்து வைக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஜய் சேதுபதி. தனித்துவமான உடல் மொழியும் கதைக்காக தன்னை அர்பணித்து நடிக்கும் திறனும் நாளுக்கு நாள் அவரது நடிப்பு திறமைக்கு ரசிகர் வட்டாரம் பெருகி வருகிறது. நிச்சயம் விஜய் சேதுபதி கதாபாத்திரம் ரசிகர்களிடையே ஒரு அழுத்தத்தை கொடுக்கும் குறிப்பாக இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுடன் இணைவதால் விடுதலை படத்திற்கு மேலும் தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இசைஞானி இளையராஜா

முன்னதாக விடுதலை படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இளையராஜா சீரியசான படத்திற்கு கொடுக்கும் பின்னணி இசை என்றும் தனித்துவமாக அந்த காட்சியின் உணர்வை மேலும் உயத்தும் வகையில் இருக்கும் அதன்படி டிரைலரிலும் விடுதலை படத்தின் பின்னணி இசை அதிகம் பேசப்பட்டது. நிச்சயம் வெற்றிமாறன் இளையராஜா கூட்டணி தமிழ் சினிமாவில் பேசப்படும்.

விடுதலை முதல் பாகத்தின் கிளைமேக்ஸ்

இரண்டு பாகங்களாக உருவாகும் படங்களின் முதல் பாகத்தின் கிளைமேக்ஸ் வரிசைப்படுத்தி பார்த்தால் தனி ஒரு உணர்வை அப்போது கொடுத்திருக்கும். அதே போல் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக அது இருக்கும் அதன்படி இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகத்தின் கிளைமேக்ஸ் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்பை தூண்டும்.