தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவான சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு பேக் டூ பேக் அப்டேட்டுகளை தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். முன்னதாக சிவகார்த்திகேயன் நீண்ட நாளுக்கு முன்னதாக நடித்து முடித்த ‘அயலான்’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா முழுவதும் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. Sci Fi திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் VFX காட்சிகளின் வேலை நடைபெற்று வருவதால் இப்படம் இந்த ஆண்டின் இறுதி கட்டத்தில் வெளியாகவுள்ளது. மேலும் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘SK21’ படப்பிடிப்பு மும்முரமாக தொடங்கியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதனிடையே 'மண்டேலா' இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ‘மாவீரன்’ வித்யாசமான கதைகளத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இப்படம் வரும் ஆகச்க்ட் மாதம் 11 ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இதனையடுத்து தொடர் அப்டேட்டுகளினால் சிவ்கார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளது படக்குழு. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் சிவ்கார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் முன்பு அறிவித்திருந்த தேதியிலிருந்து ஒரு மாதம் முன்பே ஜூலை 14 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த அறிவிப்பினை வைரலாக்கி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் திரைப்படம் இன்னும் முழு வேலை முடிவடையாத நிலையில் இப்படி தேதியை ஜூலை மாதத்திற்கு மாற்றியமைத்ததற்கு காரணம் முன்னதாக அறிவித்திருந்த ஆகஸ்ட் 11 ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதாக இருக்கலாம் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் சிவகர்த்திகேயன் என்பதாலும் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் தொடரும் நீண்ட நட்பினாலும் கூட இருக்கலாம் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.