நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சிலம்பாட்டம் திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை சனா கானுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தென்னிந்திய சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான நடிகை சனா கான், கடந்த 2005 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த யேஹி ஹாய் ஹய் சொசைட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தொடர்ந்து இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஈ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை சனா கான் பின்னர் நடிகர் சிலம்பரசனின் சிலம்பாட்டம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். சிலம்பாட்டம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமடைந்த நடிகை சனா கான் தொடர்ந்து நடிகர் பரத் நடிப்பில் வந்த தம்பிக்கு இந்த ஊரு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

தொடர்ந்து இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த பயணம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சனா கான், சாந்தனு & சத்யராஜ் இணைந்து நடித்த ஆயிரம் விளக்கு படத்திலும் கதாநாயகியாக நடித்தார். கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்யா திரைப்படத்தில் வேற லெவல் எனும் பாடலுக்கு நடனமாடிய சனா கான், தெலுங்கிலும் கல்யாணராம் கதி , மிஸ்டர் நூக்கயா உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக மலையாளத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவின் பயோபிக் படமாக தயாரான கிளைமாக்ஸ் என்னும் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தில் சனா கான் நடித்திருந்தார். கிளைமாக்ஸ் திரைப்படம் தமிழில் ஒரு நடிகையின் டைரி என்ற பெயரில் வெளிவந்தது. இதுபோக ஹிந்தியில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் அப்-ஆக வெற்றி பெற்ற சனா கான் தொடர்ந்து தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றவர்.

முன்னதாக கடந்த 2020 ஆண்டு முற்றிலுமாக திரைத்துறையை விட்டு விலகுவதாக அறிவித்த நடிகை சனா கான் அதே 2020 ஆம் ஆண்டில் மஃப்டி அனாஸ் சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த போது தான் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்திய நடிகை சனா காணுக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சனா கானை 59 லட்சத்திற்கு அதிகமானோர் பின் தொடர்கின்றனர். கடந்த ஜூலை 5ஆம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக ஒரு அழகான வீடியோ மூலம் தனது இன்ஸ்டாடிராமில் அறிவித்திருக்கிறார் நடிகை சனா கான். இதனை அடுத்து நடிகை சனா கான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. நமது கலாட்டா குழுமம் நடிகை சனா கானுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. தனக்கு ஆண் குழந்தை பிறந்த இனிப்பான செய்தியை நடிகை சனா கான் பகிர்ந்து கொண்ட அந்த க்யூட்டான வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.