கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கங்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.

.

கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.டாஸ்மாக் சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மே 17 ஊரடங்கு முடியும்வரை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

.

இந்த சம்பவம் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

.

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்

— Rajinikanth (@rajinikanth) May 10, 2020