நாடு முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றுவது மூலம் தான் பரவலை தடுக்க இயலும். இப்படிப்பட்ட சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்கள் சலூன் கடைகளுக்கு செல்லாமல் அவதி படுகின்றனர். பலரும் முகத்தில் தாடி, மீசை வளர்ந்து அடையாளம் தெரியாமல் காணப்படுகின்றனர். 

Manisha Yadav Turns Hairstylist In Lockdown

இந்நிலையில் மனிஷா அவர் கணவருக்கு முடி வெட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தை ஈர்த்து வருகிறது. வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதைத்தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் படங்களில் நடித்தார். சென்னை 28 இரண்டாம் இன்னிங்ஸ் படத்தில் இடம்பெற்ற சொப்பன சுந்தரி பாடல் மூலம் பிரபலமானார். 

Manisha Yadav Turns Hairstylist In Lockdown

ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருப்போருக்கு உதவிகரமாய் இருக்கவேண்டும் என்று மனிஷா செய்த இச்செயல் பாராட்டிற்குரியது. விரைவில் இந்த லாக்டவுன் நாட்களை கடந்து இயல்பு நிலை வரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

So he finally asked me the question........... Would u cut my hair ???😝 .......... I went Snip Snip 💇‍♂️✂️

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh) on