ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் X படத்திலிருந்து ராகவா லாரன்ஸின் ஸ்டைலான நடனத்தில் தீக்குச்சி வீடியோ பாடல் வெளியானது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசையில் பாடலாசிரியர் முத்தமிழ் மற்றும் பாடலாசிரியர் பூவன் மதீசன் இணைந்து எழுதி இருக்கும் இந்த தீக்குச்சி பாடலை முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உடன் பிரபல பாடகி உடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார். படத்தின் முதல் பாடலாக வித்தியாசமான ரெட்ரோ ஸ்டைலில் அமைந்திருந்த பாடலுக்கு ராகவா லாரன்ஸ் அட்டகாசமாக நடனம் ஆடி இருப்பார் திரையரங்குகளில் ரசிகர்களை கொண்டாட வைத்த ஜிகர்தண்டா டபுள் X படத்தின் தீக்குச்சி வீடியோ பாடல் இதோ…

தமிழ் சினிமாவில் தனி சிறப்புமிக்க இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அட்டகாசமான திரைப்படங்களாக கொடுத்து வெரைட்டியாக விருந்து வைக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் படங்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி ஆர்வம் எப்போதும் உண்டு. கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் முதல் முறை இணைந்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கிய பேட்ட படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பிறகு கார்த்திக் சுப்பராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவான ஜகமே தந்திரம் மற்றும் சீயான் விக்ரம் - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவான மகான் ஆகிய இரண்டு படங்களும் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய தளங்களில் வெளிவந்தன. இந்த நிலையில் கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நேரடியாக திரையரங்குக்கு வந்த திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் X.

தனது ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2வது பாகமான கார்த்திக் சுப்பராஜ் உருவாக்கி இருக்கிற இந்த ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இருவரும் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ஷைன் டேம் சாக்கோ, சத்யன், அரவிந்த் ஆகாஷ், இளவரசு மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிகர்தண்டா DOUBLE X படத்திற்கு திரு என்கிற திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவில், ஷபிக் முஹம்மத் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க விவேக் பாடல்களை எழுதி இருக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி வெளியீடாக வெளிவந்த இந்த ஜிகர்தண்டா டபுள் X திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக கார்த்திக் சுப்பராஜ் திரைப்படங்களில் நாம் எதிர்பாராத விதத்தில் எக்கச்சக்கமான ட்விஸ்ட்டுகள் இருப்பது வழக்கம் ஆனால் இந்த முறை மொத்த படமும் ட்விஸ்ட். ஒரு டார்க் காமெடி ஆக்சன் படமாகவோ அல்லது ஒரு டார்க் காமெடி கேங்ஸ்டர் படமாகவோ ஜிகர்தண்டா படத்தின் பாணியில் இருக்கும் என எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஆக்சன் என்டர்டெயின்மெண்ட் விஷயங்களோடு சேர்த்து சமூக பொறுப்புள்ள ஒரு எமோஷனலான சர்ப்ரைஸை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினர் ஜிகர்தண்டா டபுள் X படத்தின் மூலம் வழங்கி இருக்கின்றனர்.