சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

.



பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.



கொரோனா காரணமாக இந்த படம் குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்திற்கு இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.