தமிழ் சினிமாவில் துள்ளாலான இசையின் மூலம் ரசிகர்களை வைப் செய்ய வைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசை துறையில் அபார திறமை கொண்ட விஜய் ஆண்டனி நான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின் அசத்தலான கதைகளை தேர்ந்தெடுத்து பல ஹிட் படங்களில் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். அதன்படி அவர் நடிப்பில் வெளியான சலீம், காளி, திமிரு பிடிச்சவன், கொலைகாரன் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் அடித்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றது. இன்று வரை பிச்சைக்காரன் திரைப்படம் விஜய் ஆண்டனி திரைப்பயணத்தில் வைரக்கல்லாக இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் படதொகுப்பாலராகவும் கவனம் பெற்ற விஜய் ஆண்டனி பிச்சைக் காரன் 2 திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்து இயக்குனராக அவதாரம் எடுத்தார். பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் உருவாகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்தின் படத்தொகுப்பும் செய்து இசையமைக்கிறார் விஜய் ஆண்டனி.

இப்படம் குறித்த முன்னோட்டமும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் கடந்த தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14 ம் தேதி கோடை விடுமுறை வெளியீடாக வெளியிதுவதாக படக்குழு அறிவித்தது. இடையில் ஏற்பட்ட சிக்கல்களால் அப்படம் குறித்த தேதியில் வெளியாகாமல் போனது.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டிற்கான புதிய தேதியயை போஸ்டருடன் அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி. அதன்படி வரும் மே மாதம் 19 ம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இதனுடன் நாளை காலை 11 மணியளவில் பிச்சைக் காரன் 2 படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி. இதையடுத்து ரசிகர்கள் உற்சாத்தில் அந்த அறிவிப்பினை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய் ஆண்டனி நடிப்பில் முன்னதாக தமிழரசன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் பிச்சைக் காரன் 2 படத்தை தொடர்ந்து காக்கி, அக்னி சிறகுகள் ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அதை தொடர்ந்து விஜய் ஆண்டனி கொலை, மழை பிடிக்காத மனிதன், ரத்தம், வள்ளி மயில் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.