தமிழில் சமீபத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி மக்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். மணி ரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படதின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, விக்ரம் பிரபு, அஷ்வின் காக்கமனு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் உலகமெங்கும் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான இறுதிகட்ட விளம்பர பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில் ஒரு பங்காக இந்தியா முழுவதும் பல நகரங்களில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதில் ஒரு நிகழ்வில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மணிரத்னம் அவர்களிடம் ஐந்து பாகங்கள் கொண்ட புத்தகத்தின் கதையை இரண்டு பாகங்களாக சுருக்குவதை விட இணைய தொடராக ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், "நானே அதை எடுக்க முன்வந்தாலும் எனக்கு யார் நடிக்க தேதிகள் கொடுத்திருப்பார்கள்? இந்த நடிகர்களின் தேதிகள் கிடைக்குமா?” மணிரத்னம் கூறினார். மேலும் போன்னியின் செல்வன் நாவல் குறித்து, “நானும் பொன்னியின் செல்வன் நாவலின் ரசிகன்.அந்த நாவல் என்னை ஆழமாக பாதித்துள்ளது. அவை என்ன பாதித்த விதத்தில் அதன் கதையின் விளக்கமாக இந்த பொன்னியின் செல்வன் கொடுத்துள்ளேன்” என்றார் இயக்குனர் மணிரத்தினம்

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் தொடங்கி கமல் ஹாசன் என்று பலர் படமாக எடுக்க முயற்சித்த பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தினம் அவர்கள் கடந்த 1994 முதல் படமாக எடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி மக்கள் கொடுத்த வரவேற்பே பொன்னியின் செல்வன் படமாக வழி வகுத்தது என்று மணிரத்னம் பல மேடைகளில் பேசியிருப்பார் என்பது குறிப்பிடதக்கது.