இந்திய சினிமாவின் ஜாம்பவானாக தனது திரைப்பயணத்தில் 60 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் கலையின் மீது தீரா தாகத்தோடு ரசிகர்களின் ரசனையை மெருகேற்றும் மகத்தான கலைஞனாக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் விக்ரம்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் உலகநாயகனின் தீவிர ரசிகனாகவும் திகழும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில், கமல் ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயன்ட் மூவிஸ் வெளியிட விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இதனிடையே வருகிற மே 18-ம் தேதி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் கேனஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமைகளை பிலிம்ஸ் நிறுவனமும் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை ப்ரைம் மீடியா நிறுவனமும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Glad to be associated with @APIfilms for the overseas distribution and @PrimeMediaUS for the USA.#KamalHaasan #Vikram #VikramFromJune3@ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @turmericmediaTM @SimplySouthApp @anishwadhwa pic.twitter.com/mNDArZyu9U

— Raaj Kamal Films International (@RKFI) May 3, 2022