மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாகவும் உச்ச நட்சத்திர நடிகராகவும் திகழும் நடிகர் மோகன்லால் தற்போது இயக்குனராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். முதல் முறையாக இயக்குனராக களமிறங்கும் நடிகர் மோகன்லால் பர்ரோஸ் கார்டியன் ஆஃப் ட'காமா'ஸ் ட்ரெஷர் எனும் ஃபேண்டசி அட்வென்சர் திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார்.

இதனிடையே த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ராம் திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில் முன்னதாக மோகன்லால் கதாநாயகனாக நடித்திருக்கும் மான்ஸ்டர் மற்றும் அலோன் ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து விரைவில் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 12Th மேன். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 12TH மேன் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து உன்னி முகுந்தன், ஷிவடா, அனுஸ்ரீ, அனுசித்தாரா, லியோனா லிஷாய், பிரியங்கா நாயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 மற்றும் ப்ரோ டாடி படங்களை தொடர்ந்து 12Th மேன் திரைப்படம் OTTயில் நேரடியாக ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. வருகிற மே 20-ம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 12TH மேன் திரைப்படம் ரிலீசாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோகன்லாலின் 12Th மேன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. கவனம் ஈர்க்கும் 12Th மேன் ட்ரைலர் இதோ…