இந்தியாவில் தற்போது OTT தளங்களின் மீது சினிமா ரசிகர்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு தகுந்தார் போல் கடந்த சில வருடங்களில் சில திரைப்படங்கள் நேரடியாக OTT தளங்களில் ரிலீஸாகி வருகின்றன. மேலும் தரமான வெப்சீரிஸ்களும் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்கின்றன.

அந்த வகையில் இந்தியாவின் முன்னணி OTT தளமாக தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வருகிறது ZEE5 Original. சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் ZEE5 Original தளத்தில் அட்டகாசமான வெப்சீரிஸ்களும் வெளிவந்துள்ளன.

குறிப்பாக இந்த ஆண்டில்(2022) நடிகர் விமலின் சிறந்த கம்பேக்காக வெளிவந்த விலங்கு வெப்சீரிஸ் க்ரைம் திரில்லர் வெப் சீரிஸாக அனைவராலும் ரசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளிவந்த கார்மேகம் சீரிஸ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இந்த வரிசையில் சில தினங்களுக்கு முன்பு ZEE5 Original-ல் வெளிவந்த அனந்தம் வெப் சீரிஸ் தற்போது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும் Imdb- பட்டியலில் அனந்தம் முன்னிலை இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதே போல அடுத்தடுத்து அட்டகாசமான தரமான படைப்புகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து மகிழ்விக்க காத்திருக்கிறது ZEE5 ORIGINAL.