தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஜீ தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்று என்றென்றும் புன்னகை.நக்ஷத்திரா ஸ்ரீனிவாஸ்,விஷ்ணுகாந்த்,நிதின் ஐயர்,கவிதா,சுஷ்மா நாயர் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடரை பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி தயாரித்து வருகிறார்.ரசிகர்களின் ஆதரவுடன் இந்த தொடர் விரைவில் 600 எபிசோடுகளை கடக்கவுள்ளது.பல விறுவிறுப்பான திருப்படங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும் விதமாக தற்போது ஒரு செய்தி கிடைத்துள்ளது.இந்த தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது என்றும் இந்த தொடரின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது என்றும் தகவல் கிடைத்துள்ளது.செம ஹிட் அடித்த இந்த தொடர் விரைவில் நிறைவடைவது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.