பிரபு சாலமன் இயக்கத்தில் ராணாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

.

ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.

.

படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தாலாட்டு பாடும் பாடல் வீடியோ வெளியானது. ஏப்ரல் 2-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

.

The new anthem of the jungle is here!

Tune in to #ThaalaattuPaadum and let the adventure begin: https://t.co/3IVkz6mByq@ErosNow @RanaDaggubati #PrabuSolomon @TheVishnuVishal @zyhssn @ShriyaP @ShantanuMoitra @HaricharanMusic #SaveTheForest🐘 #Kaadan pic.twitter.com/u68fd3tY55

— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) February 27, 2020