லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

thalapathy

படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடல் வரிகளுக்கு விஜய் குரல் தந்துள்ளார். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

linturony

linturony

தற்போது படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கியதாக தெரிகிறது. படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் லின்டு ரோனி, இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சென்னையில் உள்ள KNACK ஸ்டுடியோஸில் டப்பிங் நடந்து வருவதாக தெரிகிறது. மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் தொடர்பான அப்டேட்டுகளை அறிய ஆவலில் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.