வெங்கட் பிரபு மற்றும் STR இணைந்து பணியாற்றும் திரைப்படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

venkatprabhu

ஹைதராபாத்தில் நடக்கவிருந்த படப்பிடிப்பை தற்போது சென்னையிலேயே நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். VGP கோல்டன் கடற்கரையில் செட் அமைக்கப்பட்டிருப்பதாகவும், 9 நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடைபெறலாம் என்று நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தகவல் வெளியானது. 

richardmnathan

தற்போது படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன், படப்பிடிப்புக்கு தயாராகுவது குறித்து பதிவு செய்துள்ளார். மேலும் மாநாடு ஸ்கிரிப்ட்டை படித்துக்கொண்டே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சிம்புவை எப்படி காண்பிக்க போகிறார் என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள்.