ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த விக்கி டோனார் ரீமேக் தமிழில் தாராள பிரபு என உருவாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

dharalaprabhu vivek

ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தில் சின்ன கலைவானர் நடிகர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

dharalaprabhu alex

சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி அசத்தியது. இதனைத்தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாடலான மாட்டிகிட்டான் ராசா மவன் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. பிரபல மேடை காமெடியன் அலெக்சாண்டர் இந்த பாடலை பாடியுள்ளார். பாடகர் ஹரிஷ் வெங்கட்டும் பாடியுள்ளார். திரையில் இவர் பாடும் முதல் பாடல் இதுதான் என்பது கூடுதல் தகவல். மேட்லீ ப்ளூஸ் இசையமைத்த இந்த பாடல் வரிகளை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார்.