இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் அறிவிப்பு தற்போது வெளிவந்தது. வணக்கம் சென்னை காளி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்கி வெளியிட்ட பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸை தொடர்ந்து அடுத்த படைப்பாக இந்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் தயாராகிறது. ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் யோகி பாபு வினய் ராய் லால் ஜான் கொக்கன் டிஜே பானு லட்சுமி ராமகிருஷ்ணன் வினோதினி வைத்தியநாதன் பாடகர் மனோ உள்ளிட்டோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜிகர்தண்டா திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஏரி ஒளிப்பதிவு செய்யும் இந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்திற்கு அவள் படத்தின் படத்தொகுப்பாளரான கிஷோர் படத்தொகுப்பு செய்கிறார். சோபி மாஸ்டர் மற்றும் லீலாவதி ஆகியோர் நடன இயக்குனர்களாக காதலிக்க நேரமில்லை படத்தில் பணியாற்றுகின்றனர்.மேலும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அனைத்தும் வரும் நாட்களில் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவந்திருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் இறைவன். வித்தியாசமான சைக்கோ திரில்லர் திரைப்படமாக வெளிவந்த இறைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது அதை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் இயக்குனர் மணிரத்னம் உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் அதிரடி படைப்பாக உருவாகும் THUG LIFE திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார் பொன்னியின் செல்வன் 1 & 2 திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்தினம் உடன் ஜெயம் ரவி இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் திரில்லர் திரைப்படமான சைரன் திரைப்படம் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக தயாராகும் ஜீனி திரைப்படத்தில் தற்போது ஜெயம் ரவி நடித்து வருகிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி உடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், க்ரீத்தி ஷெட்டி, வமிக்கா கேபி ஆகிய மூன்று பேரும் கதாநாயகிகளாக நடிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். அடுத்ததாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என பக்கா காமெடி என்டர்டைனர் ட்ரீட் படங்கள் கொடுத்த இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.