அட்டகத்தி, பண்ணியாரும் பத்மினியும் காக்காமுட்டை படத்தின் மூலம் பிரபலாமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி ரசிகர்களை ஆரம்பத்தில் இருந்தே ஆச்சர்யாத்தில் ஆழ்த்தி வரும் தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குனர் மணிரத்தினம், கௌதம் மேனன், வெற்றிமாறன் போன்ற பல முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்போது இருந்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகியை மையப்படுத்தி தயாராகும் படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தீயவர் குலைகள் நடுங்க, மோகன் தாஸ் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சொப்பன சுந்தரி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இதனிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஃபர்ஹானா’ படத்தின் முதல் பார்வை முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய அட்டகாசமான படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்க இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் கதையை இயக்குனர் நெல்சன் சங்கருடன் இணைந்து கதையாசிரியர்கள் ஷங்கர் தாஸ், ரஞ்சித் ரவீந்திரன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் படத்திற்கு பிரபல கவிஞர் மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதியுள்ளார் . ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

இசுலாமிய பெண்ணின் வாழ்வியலை சார்ந்து நடைபெறும் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ஃபர்ஹானா படத்தின் முதல் பார்வை முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் டீசர் நாளை மாலை 5 மணியளவில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.