திரைப்படம் மற்றும் திரையிடும் தளத்திற்கான வளர்ச்சி கொரோனா பெருந்தொற்றுக்கு முன் பின் என்று பிரிக்கலாம். குறிப்பாக ஒடிடி தளங்களின் வளர்ச்சியை பிரிக்கலாம். பெருந்தொற்று முன்பிலிருந்தே ஒடிடி தளங்கள் இருந்தாலும் சாமனிய மனிதருக்கும் இப்படி ஒரு தளம் உள்ளது என்று தெரிந்ததும் கலைஞர்கள் பெரிதும் நாடப்பட்ட இடமுமாக ஒடிடி மாறியது என்றால் அது கொரோனாவிற்கு பின்பு தான்.

முன்பெல்லாம் ஒரு படம் வெளியாவதற்கு முன் திரையரங்கு உரிமத்திற்கு பின் சாட் லைட் உரிமம் நிர்ணயிக்க படும். தற்போது காலம் இதனுடன் ஒடிடி யும் சேர்த்து கொள்கிறது. மக்கள் தொலைக்காட்சி மட்டுமல்லாமல் ஒடிடியையும் அதிகம் நுகர்வதால் திரைப்படங்களின் உரிமம் ஒடிடி களுக்கும் பிரிக்க வேண்டிய முறை வந்துவிட்டது. அதன் படி பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் வரும் ஆண்டில் வெளிவரவிருக்கும் முக்கிய தென்னிந்திய படங்களுக்கான உரிமங்களை பெற்றுள்ளது. மேலும் பொங்கல் தினத்தையொட்டி ரசிகர்களுக்கு தான் கைப்பற்றியுள்ள திரைப்படங்களை நெட்பிளிக்ஸ் பண்டிகை என்ற பெயரில் அறிவித்து வருகின்றது. நெட்பிளிக்ஸ் பண்டிகை பட்டியலில் என்னென்ன படம் உள்ளது என்பது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு

AK 62

நடிகர்கள் : அஜித் குமார்

இயக்கம் : விக்னேஷ் சிவன்

இசை : அனிரூத் ரவிசந்தர்

தயாரிப்பு : லைகா நிறுவனம்

வாத்தி

நடிகர்கள் : தனுஷ், சம்யுக்தா மேனன்

இயக்கம் : வெங்கட் அட்லூரி

இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்

தயாரிப்பு : நாக வம்சி, சாய் சௌஜன்யா

தங்கலான்

நடிகர்கள் : சியான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரிகிருஷ்ணன்

இயக்கம் : பா.ரஞ்சித்

இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்

தயாரிப்பு : கே.இ.ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் & நீலம் தயாரிப்பு

மாமன்னன்

நடிகர்கள் : உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு, பாஹத் பாசில், கீர்த்தி சுரேஷ்,

இயக்கம் : மாரி செல்வராஜ்

இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

தயாரிப்பு :ரெட் ஜெயண்ட் மூவிஸ்

ஜிகர்தண்டா : பாகம் 2

நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா

இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்

இசை : சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு :ஸ்டோன் பெஞ்ச்

சந்திரமுகி : பாகம் 2

நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வைகை புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார்,

இயக்கம் : பி.வாசு

இசை : எம் எம் கீரவாணி

தயாரிப்பு : ;லைகா நிறுவனம்

ஜப்பான்

நடிகர்கள் : கார்த்தி

இயக்கம் : ராஜு முருகன்

இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்

தயாரிப்பு : டிரீம் வாரியர் பிக்சர்ஸ்

இறைவன்

நடிகர்கள் : ஜெயம் ரவி, நயன்தாரா,

இயக்கம் : அஹமத்

இசை : யுவன் ஷங்கர் ராஜா

தயாரிப்பு :சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம்

ரிவால்வர் ரீட்டா

நடிகர்கள் : கீர்த்தி சுரேஷ்

இயக்கம் :கே.சந்துரு

தயாரிப்பு : சுதன் சுந்தரம் & ஜெகதீஷ் பழனிசாமி

ஆர்யன்

நடிகர்கள் : விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வாணி போஜன்

இயக்கம் : பிரவின் கே

இசை : சாம் சி.எஸ்

தயாரிப்பு : விஷ்ணு விஷால் ஸ்டுடியோ

இறுகப்பற்று

நடிகர்கள் : விக்ரம் பிரபு, ஷ்ரதா ஸ்ரீநாத், விதார்த்,அபர்நதி, சானியா ஐயப்பன்,

இயக்கம் : யுவராஜ் தயாளன்

இசை : ஜஸ்டின் பிரபாகரன்

தயாரிப்பு : பொட்டென்ஷியல் ஸ்டுடியோ

தலைக்கூத்தல்

நடிகர்கள் : சமுத்திரகனி, கதிர்

இயக்கம் :ஜெய பிரகாஷ் ராதா கிருஷ்ணன்

இசை : கண்ணன் நாராயணன்

தயாரிப்பு : Y NOT Studios

Production No. 18

நடிகர்கள் : விதார்த், யோகி பாபு

இயக்கம் : டி.அருள்செழியன்

தயாரிப்பு : லைகா நிறுவனம்

Production No. 20

நடிகர்கள் : ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ்

இயக்கம் : ரோஹின் வெங்கடேஷன்

இசை : சித்து

தயாரிப்பு : லைகா நிறுவனம்

Production No. 24

நடிகர்கள் : பாரதி ராஜா, அருள்நிதி, ஆத்மிகா,

இயக்கம் : ஹரிஷ் பிரபு

இசை : சாம் சி.எஸ்

தயாரிப்பு : லைகா நிறுவனம்