சின்னத்திரையின் வாயிலாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து நட்சத்திரமாக ஜொலிக்கும் செஃப் தாமு அவர்கள் தமது சமையல் கலையில் கின்னஸ் சாதனை படைத்தவர். தமிழ்நாட்டின் பல தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளின் வழியே உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களின் இதயங்களை கவர்ந்த செஃப் தாமு அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வாயிலாக மேலும் மக்களை மகிழ்வித்து வருகிறார். இந்த நிலையில் நமது கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் அவார்ட் 2022 விருது விழாவில் VETERAN CHEF OF THE DECADE என்ற விருது செஃப் தாமு அவர்களுக்கு வழங்கப்பட்டது. செஃப் வெங்கடேஷ் பட், சிவாங்கி, புகழ், குரேஷி, மணிமேகலை, ஸ்ருதிகா ஆகியோரோடு குக் வித் கோமாளி குழுவினர் ஒன்றிணைந்து இந்த விருதை செஃப் தாம் அவர்களுக்கு வழங்கினர்.

மாலை அணிவித்து, மரண மாஸ் பாடல் போட்டு மாஸாக மேடை ஏறி வந்த செஃப் தாமு அவர்கள் தொடர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கும் நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இதனை அடுத்து விருதை பெற்றுக் கொண்ட செஃப் தாமு அவர்கள் பேசியபோது, “ரொம்ப ரொம்ப சந்தோஷம் முதலில் குக் வித் கோமாளி அணிக்கு நன்றி… முக்கியமாக ரவ்ஃபா மேடம், பிரதீபா மேடம், மற்றும் எனது அன்பான இளம் இயக்குனர் பார்த்திபன் ஆகியோருக்கு மிக்க நன்றி. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக மாறியதற்கு முக்கிய காரணமே இந்த மூன்று பேர் தான். இந்த மூன்று பேர் இல்லை என்றால் குக் வித் கோமாளியே இல்லை. அதேபோல் எங்களோடு இருக்கும் சகாக்கள். அவர்கள் இல்லை என்றாலும் இந்த நிகழ்ச்சி கலை கட்டி இருக்காது. சிவாங்கி, புகழ், பாலா, சரத், மணிமேகலை, குரேஷி அவர்களெல்லாம் இல்லை என்றால்... எனவே அவர்களுக்கும் நன்றி. என தெரிவித்தார்.

தொடர்ந்து செஃப் தாமு அவர்களுக்கு கிடைத்த இந்த விருது குறித்து பேசிய வெங்கடேஷ் பட் அவர்கள், “இரண்டு வார்த்தை என்ன நிறைய வார்த்தைகள் சொல்லலாம் செஃப் தாமு அவர்களை பற்றி இந்த விருதுக்கு மிகவும் தகுதியானவர். VETERAN CHEF OF THE DECADE இல்லை VETERAN CHEF OF THE CENTURY... ஒரு சமையல் கலையை தமிழகத்தில் இவ்வளவு பிரபலமாக்கி அதற்கு ஒரு மரியாதை கொண்டு வந்ததற்கு மூல காரணமாக இருக்கும் செஃப் தாமு அவர்களுக்கு அவருடைய மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லாக இந்த விருது அமைகிறது. வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்” என தெரிவித்துள்ளார். செம மாஸாக மேடையில் நடனமாடிய செஃப் தாமு அவர்கள் விருது பெற்ற அட்டகாசமான அந்த வீடியோ இதோ…