தமிழ்நாட்டின் முன்னணி சேனல்களில் ஒன்றாக திகழும் விஜய் தொலைக்காட்சியின் கலக்கலான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பல புதுமைகள் நிறைந்த பிக் பாஸ் சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒவ்வொரு சீசனும் தொடங்குவதற்கு முன்பு பல நட்சத்திரங்களுக்கு பெயர்கள் எதிர்பார்ப்பு பட்டியலில் இருக்கும். அந்த வகையில் இந்த முறையும் எதிர்பார்ப்பு பட்டியலில் இருந்த சிலர் இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அது போக எதிர்பார்க்கப்படாத பலர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது.

அந்த வகையில் தற்போது பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கும் இந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் நுழைந்திருக்கும் 18 போட்டியாளர்களின் முழு பட்டியல் பின்வருமாறு:

1.கூல் சுரேஷ் / நடிகர்


2.பவா செல்லதுரை / எழுத்தாளர், பேச்சாளர்


3.விசித்ரா / நடிகை


4.விஷ்ணு / சின்னத்திரை நடிகர்


5.வினுஷா தேவி / சின்னத்திரை நடிகை


6.பிரதீப் ஆண்டனி / நடிகர்


7.அக்ஷயா உதயகுமார் / நடிகை லவ் டுடே


8.ஐஷு / நடனக்கலைஞர்


9.சரவண விக்ரம் / சின்னத்திரை நடிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ்


10.ஜோவிகா விஜயகுமார் / வனிதா விஜயகுமாரின் மகள்


11.யுகேந்திரன் / பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன்


12.ரவீனா தாஹா / சின்னத்திரை நடிகை


13.மணி சந்திரா / நடன இயக்குனர்


14.விஜய் வர்மா / நடன இயக்குனர்


15.பூர்ணிமா ரவி / நடிகை


16.மாயா கிருஷ்ணன் / நடிகை


17.அனன்யா S ராவ் / இன்ஸ்டாகிராம் பிரபலம்

18. நிக்சன் / நடிகர் பாடகர்

உள்ளிட்ட 18 பேர் தற்போது போட்டியாளர்களாக களமிறங்கி இருக்கின்றனர். முதல் நாளிலேயே முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்த உடன் அவரை கேப்டனாக தேர்ந்தெடுத்த பிக் பாஸ் அடுத்து வரும் நபருடன் பேசி கேப்டன் பதவியை நீடிப்பதும் அதை இழப்பதும் என நுழையும் போதே டாஸ்க் உடன் இந்த முறை பிக் பாஸ் தொடங்கி இருக்கிறது. முதல் நாள் கொண்டாட்டம் அடுத்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்க ஆரம்பித்து பற்றி எரியும் என வழக்கமாக இருந்த பிக் பாஸ் தற்போது முதல் நாளில் முதல் நிமிடத்தில் இருந்து சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. எனவே வழக்கத்தை விட இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி கட்டாயமாக ரசிகர்களுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத சீசன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.