அமெரிக்காவில் உயிரிழந்த இந்தியப் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஐதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான சிவக்குமார், அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி  38 வயதான கஜம் வனிதா, ஐதராபாத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ஐதராபாத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் மனைவி கஜம் வனிதாவை, சிவக்குமார் அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளார். 

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், திடீரென்று கஜம் வனிதா உயிரிழந்துள்ளார். இந்த தகவல், இந்தியாவில் உள்ள அவரது பெற்றோருக்குத் தெரியவந்த நிலையில், தனது மகளின் உடலை இந்தியா கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், தனது மகள் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றது முதல், தங்களிடம் பேச வில்லை என்றும், அங்கு மாமியார் கொடுமையால் பாதிக்கப்பட்டு, தனது மகள் தற்கொலை செய்திருக்கலாம் என்றும், உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

​​​​​​​
இதனிடையே கஜம் வனிதா திடீரென உயிரிழந்தது தொடர்பாக அவரது கணவர் சிவகுமாரிடம், அமெரிக்க போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஜம் வனிதாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையான விவரமும் தெரிய வரும் என்பதால், போலீசார் அதற்காகக் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.