தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள வலிமை படம் 2022 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தினை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கியுள்ளார்.இதற்கு முன் இதே கூட்டணியின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துளளார்.குக் வித் கோமாளி புகழ்,யோகி பாபு,ராஜ் அய்யப்பா,சுமித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள்,ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை மற்றும் தெலுங்கானா,ஆந்திர பிரதேஷ் உரிமையை முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளனர்.பிரம்மாண்டமாக இந்த படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது,ரசிகர்கள் ரிலீஸை எதிர்நோக்கி ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Countdown Begins 💥 10 days to go for #AjithKumar 's #Valimai Release 💪 #ValimaiUSA Premiere on Feb 23 🇺🇸 Release by @Hamsinient #ValimaiUSAPremiereOnFeb23 #ValimaiFromFeb24 #HVinoth @thisisysr @ActorKartikeya @humasqureshi @BoneyKapoor @BayViewProjOffl @ZeeStudios_ pic.twitter.com/byNRug746h

— Hamsini Entertainment (@Hamsinient) February 14, 2022

We are pleased to announce our association with @IVYProductions9 for the release of #Valimai in Telangana and Andhra Pradesh.#Valimai240222#ValimaiFromFeb24#AjithKumar @BoneyKapoor #HVinoth @thisisysr @BayViewProjOffl @innamuri8888 @Venkatupputuri @sureshchandraa pic.twitter.com/tOU0CAhr5T

— Zee Studios (@ZeeStudios_) February 15, 2022