தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக டாக்டர் படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இவர் நடித்துள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஸ்ரீ  வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் SK 20 படத்தில் நடிக்கிறார்.இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் bilingual ஆக உருவாகிறது.இந்த படத்தினை தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த Jathi Rathnalu பட இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் காரைக்குடியில் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரலாகி வந்த்தன.படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.காரைக்குடியில் நடைபெற்று வரும் இந்த ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்தித்துள்ளார்.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.