தலைநகர் கொழும்பில் நடைபெற்ற மிஸஸ் ஸ்ரீலங்கா போட்டியில் புஷ்பிகா டி சில்வாவின் "திருமதி இலங்கை" பட்டம் பறிக்கப்பட்டுள்ளது என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டுக்கான திருமதி வேர்ல்ட் அழகி போட்டி அமெரிக்கவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றது. ஏப்ரல் 6, 2021 அன்று, தலைநகர் கொழும்பில் நடைபெற்ற மிஸஸ் ஸ்ரீலங்கா போட்டியில், புஷ்பிகா டி சில்வா “திருமதி ஸ்ரீலங்கா” என முடிசூட்டப்பட்டதைத் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தார்.

இந்நிலையில் மேடையில் இருந்தபோது அவரது கிரீடம் முந்தைய வெற்றியாளரான கரோலின் ஜூரியால் பறிக்கப்பட்டது, அவர் நியாயமற்ற முறையில் வெற்றி பெற்றதாகக் கரோலின் புகார் கூறியிருந்தார். இந்த ஆண்டுக்கான திருமதி வேர்ல்ட் அழகி போட்டி அமெரிக்கவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றது, இதில் திருமணமான பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர், இந்த போட்டியில் அமெரிக்கரான ஷைலின் போர்டு முடிசூட்டப்பட்டார்.

மேலும் இது குறித்து புஷ்பிகா டி சில்வா தனது சமூக ஊடகப் பதிவுகளில் “கடந்த மாதம் லாஸ் வேகாஸில் நடைபெற்ற திருமதி வேர்ல்ட் போட்டியில் நடுவர்கள் தேவையற்ற செல்வாக்கு செலுத்தியதால் தான் வெற்றி பெறத் தவறியதாகவும், தனது சொந்த அணியில் சிலர் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புகளை குறைத்ததாக” டி சில்வா குற்றம் சாட்டியிருந்தார். இந்த போட்டியில் நடுவர்கள் முறைகேடாக செயல்பட்டதால்தான் தனக்கு வெற்றி கிட்டவில்லை என்று புஷ்பிகா டி சில்வா சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டினார்.

அதனைத்தொடர்ந்து, புஷ்பிகா டி சில்வாவின் "திருமதி இலங்கை" பட்டம் பறிக்கபட்டுள்ளது, அதை அவர் எந்த விளம்பர நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. டி சில்வா, தான் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் கணவனிடமிருந்து பிரிந்திருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் டி சில்வா விவாகரத்து பெற்றதால் அவர் பட்டத்திற்க்கு தகுதியற்றவர் என்று தெரிவித்து புஷ்பிகா டி சில்வாவின் "திருமதி இலங்கை" பட்டம் பறிக்கப்பட்டுள்ளது என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவரது இந்த கருத்து உலக அளவில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இலங்கையின் போட்டி அமைப்பாளர் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து புஷ்பிகா டி சில்வாவின் ‘திருமதி இலங்கை’ பட்டம் பறிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பட்டத்தை விளம்பரங்களுக்காக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. புஷ்பிகா டி சில்வா ஏற்கனவே ‘திருமதி இலங்கை’ பட்டத்தை பெற்ற போது மேடையிலேயே அவரது கிரீடத்தை கரோலின் ஜுலி என்பவர் பறித்தார். இந்த நிலையில் அவரிடம் இருந்து மீண்டும் ‘திருமதி இலங்கை’ பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.