தாயும் - மகனும் தகாத உறவு வைத்துக்கொண்டதை எதிர்த்து கேள்வி கேட்ட தந்தையை அடித்து எரித்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்த 55 வயதான சுப்புராஜை, கடந்த 3 மாதங்களாகக் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த சுப்புராஜ் சகோதரர்கள், அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டில் மாயமான சுப்புராஜின் மனைவி 45 வயதான பிச்சையம்மாள், 29 வயதான மகன் சுரேஷ், 25 வயதான மகள் பிரியா ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது, சுப்புராஜ் பற்றி அவரது சகோதரர் விசாரித்துள்ளார். ஆனால், சுப்புராஜ் வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாக, அவரது குடும்பத்தினர் 3 பேரும் தெரிவித்துள்ளனர்.

இதில், சந்தேகமடைந்த அவரது சகோதரர், அங்குள்ள சாத்தூர் காவல் நிலையத்தில் தனது சகோதரரைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு. தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சுப்புராஜ் வீட்டின் பின்புறம் தலைமுடி, எலும்புகள் காணப்படுவதாக அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சுப்புராஜ் வீட்டிற்கு வந்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது,
வீட்டின் பின்புறம் தோண்டும்போது, சில எலும்புகள் மட்டும் அங்குக் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சுப்புராஜ் மனைவி, மகன், மகள் ஆகிய 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில் தாய் பிச்சையம்மாளுக்கும், மகன் சுரேஷுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இந்த தகாத உறவை நேரில் பார்த்த தந்தை சுப்புராஜ், இதனை எதிர்த்து கேள்வி கேட்டு சண்டைக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து, அவர், வெளியே சென்றுவிட்டு போதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்துள்ளார்.

இதைப் பயன்டுத்திக்கொண்ட தாயும், மகனும் அவரை கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு, வீட்டின் பின்புறம் தீ வைத்து எரித்து, அங்கேயே புதைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் குடும்ப உறுப்பினர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இதனிடையே தாயுடன், மகன் தகாத உறவு வைத்திருந்த நிகழ்வும், அதனைத் தட்டிக்கேட்ட தந்தையை எரித்துக் கொன்ற சம்பவமும் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.