பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

parole for Perarivalan

இந்நிலையில், பேரறிவாளனின் தந்தை குயில்தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவரை நேரில் சென்று பார்த்துக்கொள்ள, பேரறிவாளனுக்குத் தமிழக அரசு பரோல் வழங்கி உள்ளது.

அதன்படி, இந்த பரோலானது வரும் 11 ஆம் தேதி முதல், ஒரு மாத காலத்திற்கு வழங்கப்படுகிறது. 

ஏற்கனவே, கடந்த வருடம் பேரறிவாளனுக்கு 2 மாதங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2 வது முறையாக பல்வேறு நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்படுகிறது. 

parole for Perarivalan

கடந்த முறை பரோல் வழங்கப்பட்டபோது, தனது ஆயுட்கால தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.