உக்ரைன் விமானம் விழுந்த விபத்தில் பயணம் செய்த 170 பயணிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் உருவாகும் சூழல் தற்போது உருவாகி உள்ளது.

இந்நிலையில், உக்ரைன் விமானம் ஒன்று, ஈரானிலிருந்து 170 பயணிகளுடன் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விழுந்தது.

விமானம் கீழே விழுந்ததில் தீ பற்றி எரிந்த நிலையில், விமானத்தின் பல பாகங்கள் 4 புறமும் சிதறின. இதில், பயணம் செய்த 170 பயணிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக உடனடியாக விரைந்து வந்த ஈரான் மீட்புப் படையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, அமெரிக்கா விமான தளங்கள் மீது ஈரான் இன்று காலை தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், ஈரான் ராணுவத்தினரே தவறுதலாக அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால், ஈரானில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், ஈரான் - ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.