மனைவிக்கு வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் அனுப்பியவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீண்ட காலமாக இருந்த முத்தலாக் முறைக்கு உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடியாகத் தடை விதித்தது. இதனையடுத்து, இஸ்லாமிய மக்கள் விவகாரத்து பெற விரும்பினால், நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே பெற முடியும் சூழல் உருவானது.

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண், அங்குள்ள கடம்ட்லா காவல் நிலையில் தன் கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தனக்குத் திருமணமாகி சில வருடங்கள் ஆவதாகவும், தனது கணவர் சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வருவதாகவும் தெரிவித்த அவர், “எனது கணவருக்கு, என்னைத் தன்னைப் பிடிக்கவில்லை என்று கூறி, வாட்ஸ்அப் மூலம் தனக்கு முத்தலாக் கூறினார்” என்று அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்தியாவில் எல்லாம் டிஜிட்டல் மயமான நிலையில், வாட்ஸ்ஆப் மூலம் ஒருவர், தனது மனைவிக்கு முத்தலாக் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.