மனைவியுடன் இன்புற்றிருந்த நேரத்தில் 2 மாத பச்சிளம் குழந்தை அழுததால், ஆத்திரமடைந்த தந்தை குழந்தையை அடித்தே கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை அசோக் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான எல்லப்பன், கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவி துர்காவுக்கும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

Father killed two month child

அந்த குழந்தைக்கு இவர்கள் ராஜமாதா, என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த எல்லப்பன், மனைவியுடன் இன்புற்று தாம்பத்தியத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, தூக்கத்திலிருந்து கண் விழித்த குழந்தை, பசியில் அழுதுள்ளது. இதனால், படுக்கையில் எல்லப்பனோடு இருந்த துர்கா, எல்லப்பனை விட்டு விலகிச் சென்று, குழந்தைக்குப் பால் கொடுத்துப் பசி ஆற்றிக்கொண்டிருந்தார்.

இதனால், ஆத்திரம் அடைந்த எல்லப்பன், காம மோகத்தில் குழந்தையின் கன்னத்தில் பலமாக அடித்துள்ளார். அதில், 2 மாத பச்சிளம் குழந்தை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. Father killed two month child

 

குழந்தை உயிரிழந்தது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், எல்லப்பனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, 2 மாத பச்சிளம் குழந்தையை, காம மோகத்தில் தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.