பேச்சுத் தகராறில் ஒருவர் ஓட ஓட அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவேற்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில், ஏசுகுமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் அவருடன் ரகு ஆனந்தன் மற்றும் சிலம்பரசன் என்பவர்களும் பணியாற்றி உள்ளனர். 

 murder

இந்நிலையில் ஏசுகுமாரை, உடன் பணியாற்றும் ரகு ஆனந்தன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் தவறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால், அவர்கள் 3 பேருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, நிறுவனத்தில் உள்ள சக நண்பர்கள் அந்த சண்டையை அப்போதைக்குத் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இதனையடுத்து, நிறுவனத்தை விட்டு வெளியே வந்ததும், ஏசுகுமாரை அவர்கள் இருவரும் சேர்ந்து ஓட ஓட விரட்டி அடித்தே கொலை செய்துள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, சென்னை பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில், அனைத்து தரப்பு வாதங்களும் விசாரிக்கப்பட்டு, தற்போது தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 

 murder

அதன்படி, இந்த வழக்கில் ரகு ஆனந்தன் மற்றும் சிலம்பரசன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அபராதம் கட்ட தவறினால், மேலும் 8 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் அந்த தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது.