முதுமையில் கவனிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் சித்தேஸ்வர் கோயில் மலைப்பகுதியில் 64 வயதான எடப்பாடி நல்லகவுண்டர் என்பவரும், 60 வயதான அருக்காணியும் தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.

இவர்களது மகன் திருமணம் செய்துகொண்ட பிறகு, மனைவி மற்றும் குழந்தைகளுடன், கவுண்டன்பட்டியில் குடியேறி வசித்து வந்துள்ளார். இதனால், வயதான இந்த தம்பதியினர் தனிமையில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், முதுமையின் காரணமாக, இருவருக்கும் தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்றுவர முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

இதனால், யாருமின்றி ஆதரவு இல்லாமல் வாழ்வதற்குப் பதிலாக, சாவதே மேல் என்று எண்ணி, இருவரும் மனமுடைந்த நிலையில், பூச்சி மருந்தைக் குடித்து அங்குள்ள மலைப்பகுதியில் தற்கொலை செய்துகொண்டனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வயதான தம்பதியினரின் தற்கொலை தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருமணம் ஆனது முதல் இணைபிரியாமல் அன்பாக வாழ்ந்த வந்த தம்பதியினர், வயது முதுமையிலும் இணைப்பரியாமல் ஒன்றாகச் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.