அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே என்று உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த இடத்திற்கு, நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியம், ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் இந்த இடத்திற்கு உரிமை கோரியதால், இது தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

Ayodhya Case

இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், இறுதியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

கடந்த 16 ஆம் தேதியுடன் இந்த வழக்கின் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு முறைப்படி அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நிலத்துக்கு உரிமை கோரி ஷியா வக்பு வாரியம் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர்.

Ayodhya Case

அதன்படி, அயோத்தியில் பாபரின் தளபதியால் மசூதி கட்டப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டு ராமர் சிலை வைக்கப்பட்டதாகத் 

தலைமை நீதிபதி குறிப்பிட்டார். அத்துடன், இந்த வழக்கில் தொல்லியல் துறையின் அறிக்கையை நிராகரிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

Ayodhya Case

மேலும், பாபர் மசூதி காலியான இடத்தில் கட்டப்படவில்லை என்றும், அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன என்றும் கூறினார். பாபர் மசூதிக்குக் கீழே கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் அல்ல என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

குறிப்பாக, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தில் இஸ்லாமிற்கு இடமில்லை என்றும், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும்  உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது. 

அத்துடன், அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், அதற்குப் பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும், இதற்கான செயல் திட்டத்தை 3 மாதத்தில் உருவாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், நாட்டு மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, அமைதி காக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.