அயோத்தி வழக்கின் தீர்ப்பில் கவனிக்கப்படவேண்டிய 15 அம்சங்களை தற்போது பார்க்கலாம். 

1. நிலத்துக்கு உரிமை கோரி ஷியா வக்பு வாரியம் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
2. 1949 ஆம் ஆண்டு, மசூதியில் ராமர் சிலைகள் வைக்கப்பட்டதாக நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
3. மதச்சார்பின்மையின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டதாகத் தலைமை நீதிபதி ரஞ்சன் ரஞ்சன் கோகாய் கருத்து.
4. இறை நம்பிக்கை விவகாரங்களில், நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல எனத் தலைமை நீதிபதி கருத்து கூறினார்.
5. அயோத்தியில் பாபரின் தளபதியால் மசூதி கட்டப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.

Ayodhya case verdict

6. பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை என்பதை தொல்லியல்துறை கூறுவதைப் புறக்கணிக்க முடியாது. 
7. மசூதி இருந்த இடத்திற்குக் கீழே காணப்பட்ட கட்டுமானங்கள் இஸ்லாமியர்களின் கட்டுமானங்கள் இல்லை.
8. ராமர், அயோத்தியில் தான் பிறந்திருக்கிறார் என்பதை இந்து மக்கள் நம்புகிறார்கள்.
9. நிலத்தின் உரிமையை, நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யவே முடியாது.
10. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பங்காகப் பிரித்துக்கொடுக்க அலகாபாத் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறு.

Ayodhya case verdict

11. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே. 
12. அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம். அந்த 2.77 ஏக்கர் நிலமும் ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.
13. அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் கொடுக்க முடிவு.
14. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 5 ஏக்கர் மாற்று இடத்தை, மத்திய - மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
15. அடுத்த 3 மாதங்களுக்கு அறக்கட்டளை ஒன்றை நிறுவி, இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15. சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்குச் சொந்தமானது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.