ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி அடுத்த சிபோகான் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன், வீட்டின் அருகே தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது, அந்த பகுதியில் மூடப்பாடல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில், எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்துள்ளான். இதனையடுத்து, அந்த சிறுவனுடன் விளையாடிய அவனுடைய நண்பர்கள், அந்த பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த பெரியவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசாரும் மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர்.

மேலும், ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, சிறுவன் சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன், சிறுவனுக்குத் தேவையான குடிநீர் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், தேவையான மருத்துவ உபகரணங்களுடன், மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுவனைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.