கனமழை எதிரொலியாக 3 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய தொடர்ந்து கனமழை செய்து வந்தது. சென்னையில் நள்ளிரவில் சாரல் மழை பெய்த நிலையில், அதிகாலை நேரத்திலும், சாரல் மழை பெய்தது.

அதேபோல், காஞ்சி, வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில், கனமழை காரணமாகச் சென்னைப் பல்கழைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகத் துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான மாற்றுத் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.