பள்ளியில் சிறுவனை பாம்பு கடித்ததாகத் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9 வயதான ஜெரால்டு என்ற மாணவன் படித்து வருகிறார்.

Kerala School Boy Snake Bite

இந்நிலையில், இன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவன், பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, காலில் ஏதோ கடித்தது போல் உணர்ந்த அவர், உடனடியாக காலனிகளை கழற்றிவிட்டுப் பார்த்துள்ளார்.

அப்போது, காலில் பாம்பு கடித்தார் போல், 2 பல்லு பட்ட தடம் இருந்த நிலையில், லேசாக ரத்தம் கசிந்துள்ளது.  இதனால், அந்த மாணவனைப் பாம்பு கடித்துவிட்டது என்று கூறி, ஆசிரியரிடம் சக மாணவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், மாணவனின் தந்தைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

Kerala School Boy Snake Bite

இதனையடுத்து, பள்ளி மாணவன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை அளித்தனர். ஆனால், உடம்பில் எந்த விஷமும் இல்லை என்றும், இது பாம்பு கடிபோல் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவன் வீடு திரும்பினார். இதனிடையே, கடந்த வாரம் கேரள மாநிலம் வயநாட்டில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த 10 வயது சிறுமிக்குப் பாம்பு கடித்ததில், அவர் உயிரிழந்தார். இந்த விவகாரம், அங்கு பூதாகாரமாக வெடித்தது. இதனையடுத்து, மீண்டும் பள்ளி மாணவனுக்குப் பாம்பு கடித்ததாகச் செய்தி வெளியான சம்பவம், அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.