“தமிழக ஊடகங்களை விட, பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர் என்றும், தமிழக ஊடகங்களைப் பொருத்தவரை நான் இறந்துவிட்டேன்” என்றும் நித்தியானந்தா விரக்தியுடன் பேசியுள்ளார்.

பெண்களைக் கடத்தியதாக நித்தியானந்தா மீது குஜராத் போலீசார் மற்றும் கர்நாடகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், நித்தியானந்தா ஆன்லைனில் தன்னுடைய பக்தர்களுக்குச் சத்சங்கம் மூலம் பேசி வருகிறார்.

இந்நிலையில், அவர் நேற்று பேசிய வெளியிட்ட வீடியோவில், “மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள், தங்களுடைய குடும்பச் சூழல் மற்றும் வயிற்றுப் பிழைப்புக்காகத் தான், அந்த தொழிலில் தள்ளப்பட்டுள்ளனர்.

அப்படியிருக்க, தமிழக ஊடகங்களை விட, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறந்தவர்கள். தமிழக ஊடகங்களை ஒப்பிடுகையில், அவர்கள் ஒன்றும் மோசமானவர்கள் கிடையாது.

பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள் என்பதால், தமிழக ஊடகங்களை, சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம்.

இனி, நான் தமிழ்நாட்டிற்கு வரப்போவதில்லை. தமிழக ஊடகத்தைப் பொருத்தவரை நான் இறந்துவிட்டேன்” என்றும் நித்தியானந்தா விரக்தியுடன் பேசியுள்ளார்.

இதனிடையே, நித்தியானந்தா இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. அத்துடன், தமிழக ஊடகத்தை விமர்சித்துப் பேசியதற்காக, நித்தியானந்தாவுக்கு கடும் கண்டனங்களும் குவிந்து வருகின்றன.