அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் - தாஜ்மகாலுக்கும் ஏற்கெனவே சில தொடர்புகள் உள்ளன. அது என்ன வென்று தற்போது பார்க்கலாம்..

அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் உடன், நாளை இந்தியா வருகிறார்.

What are the ties between Trump and Taj Mahal?

இந்தியாவில் குஜராத் மற்றும் டெல்லியில் சில முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார். 

இந்த பயணத்தில், ட்ரம்ப் தன் காதல் மனைவி மெலனியாவுடன், உத்தரப் பிரதேசம் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க உள்ளார். 

இதனிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், தாஜ்மகாலுக்கும் ஏற்கெனவே சில தொடர்புகள் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

* காதல் நினைவுச் சின்னமாக, ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரையோரம் கடந்த 1600 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது தாஜ்மஹால். இதை காண அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் காதல் மனைவி மெலனியாவுடன், அதிபராக முதன் முறையாக இந்தியா வருகிறார்.

What are the ties between Trump and Taj Mahal?

* இந்தியாவின் தாஜ்மஹாலைப் போன்றே, ட்ரம்புக்கும் அமெரிக்காவில் தாஜ்மஹால் என்னும் மிக பிரமாண்டமான சூதாட்ட விடுதி இருந்தது.

* அமெரிக்காவின் அட்லாண்ட்டிக் நகரில், கடந்த 1990 ஆம் அண்டு, ஏப்ரல் 2 ஆம் தேதி மிக பிரமாண்டமான சூதாட்ட விடுதியை ட்ரம்ப் அப்போது தொடங்கினார்.

* இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் போன்ற வடிவத்திலேயே, அமெரிக்காவிலும் ட்ரம்பின் தாஜ்மஹால் கட்டப்பட்டது.

* அந்த தாஜ்மஹாலுக்கு “ட்ரம்ப் தாஜ்மஹால்” என்று அவரே பெயர் சூட்டிக்கொண்டார்.

What are the ties between Trump and Taj Mahal?

* 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பிரமாண்டமான “ட்ரம்ப் தாஜ்மஹால்” சூதாட்ட விடுதியில், சுமார் 3 ஆயிரம் பேர் பணியாற்றி வந்தனர்.

* இந்தியாவின் தாஜ்மஹால் உலகப் புகழ் பெற்றது திகழ்ந்தது போலவே, அமெரிக்காவில் “ட்ரம்ப் தாஜ்மஹால்” மிகவும் பிரபலமான ஒன்றாகத் திகழ்ந்தது.

* ஆனால், “ட்ரம்ப் தாஜ்மஹால்” பணியாற்றிய ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வுக்கால பலன்கள் வழங்க மறுத்ததால், கடந்த 2016 ஆம் ஆண்டு, “ட்ரம்ப் தாஜ்மஹால்” இழுத்து மூடப்பட்டது. 
 
* “ட்ரம்ப் தாஜ்மஹால்” இழுத்து மூடப்பட்டாலும், காதலின் ஆதார சின்னமாகக் கட்டப்பட்ட ஒரிஜினல் தாஜ்மஹாலைப் பார்ப்பதற்காக, ட்ரம்ப், தன் காதல் மனைவியுடன் அதிபரான பிறகு, முதன் முதலாகப் பார்க்க வருவது குறிப்பிடத்தக்கது.