ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெதுவாகப் பந்துவீசியதற்காக இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக நேற்ற நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்த் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட, பந்து வீச கூடுதலான நேரம் எடுத்துக்கொண்டதாக, போட்டியின் நடுவர் புகார் தெரிவித்தார். அத்துடன், குறிப்பிட்ட நேரத்திற்குள், இந்திய அணியால் பந்து வீச முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராட், இந்திய அணிக்குப் போட்டி கட்டணத்திலிருந்து அதிக பட்சமாக 80 சதவீதம் அபராதம் விதித்தார்.

இந்திய அணியானது, கடந்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக மெதுவாகப் பந்து வீசியதற்காக, தொடர்ந்து அபராதம் செலுத்தி வருகிறது.

இதற்கு முன்பாக, நியூசிலாந்த்துக்கு எதிரான 4 வது டி20 போட்டி மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், போட்டி கட்டணத்திலிருந்து 40 சதவீதம் மற்றும் 20 சதவீதம் என அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.