பீச்சில், பொதுமக்கள் முன்பு வெளிநாட்டுப் பயணிகள் இருவர் உல்லாசத்தில் ஈடுபட்டது, பார்ப்பவர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அக்லான் மாகாணத்தில் உள்ள பிரபலமான பொராகாய் தீவு கடற்கரையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.

Couple arrested for public sex in Philippines

அப்போது, மாலை 5.45 மணி அளவில், இங்கிலாந்து நாட்டிலிருந்து சுற்றுலா வந்த 26 வயதான ஜாஸ்மின் நெல்லி என்ற இளம் பெண்ணும், ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து சுற்றுலா வந்த 26 வயதான அந்தோணி கேரியோ என்ற இளைஞரும் நேருக்கு நேர் சந்தித்து, பேசிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில், இருவரும் இங்கிலீஸ் முத்தம் கொடுக்கத் தொடங்கியவர்கள், போகப் போக.. எல்லை மீறி எல்லோர் முன்பும், பட்டப் பகலில் கசமுசாவில், உல்லாசத்தில் ஈடுபட்டனர்.

Couple arrested for public sex in Philippines

இந்த காட்சியை, கடற்கரையில் கூடியிருந்த மற்ற சுற்றுலா வாசிகள் வேடிக்கை பார்த்து கிரங்கிப் போனார்கள்.  

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், உல்லாசத்தில் ஈடுபட்ட ஜோடியைக் கைது செய்து, காவல் துறை வாகனத்தில் ஏற்றினர். ஆனாலும், தாங்கள் கைது செய்யப்பட்டதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத அந்த ஜோடி, அது போலீஸ்  வாகனம் என்று கூட பார்க்காமல், மீண்டும் கசமுசா வில் ஈடுபட்டனர்.

Couple arrested for public sex in Philippines

இதனால், தர்ம சங்கடத்திற்கு ஆளான போலீசார், இருவரின் கைகளிலும் விலங்கு மாட்டி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அத்துடன், பொதுமக்கள் முன்னிலையில் உல்லாசத்தில் ஈடுபட்ட இருவரும் நிதானம் இல்லாமல், போதையின் உச்சத்தில் இருந்ததாகவும், அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.