கொரனா வைரஸ்சால் சீன மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சில புகைப்படங்கள் வெளியாகி, கண்ணீரை வரவழைக்கின்றன.

சீனாவில் உருவாகி, இன்று உலகம் முழுக்க பரவி வருகிறது கொரனா வைரஸ். இந்த நோய்க்கு சீனாவில் மட்டும் கிட்டத்தட்ட 170 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையில், கிட்டதட்ட 7 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவில் பெரும்பாலான நிறுவனங்கள் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில், சீனாவிற்கு இயக்கப்படும் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், சீனாவின் பெரும்பாலான சாலைகள் விரிச்சோடி காணப்படுகின்றன. பலரும் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அதனை மீறி வெளியே செல்பவர்கள் அனைவரும், முகத்தில் பாதுகாப்பு மாஸ்க் அணிந்துகொண்டு, பயணப்படுகிறார்கள். இதனால், சீனா முழுமைக்கும் பாதுகாப்பு மாஸ்க் அணிந்தவாறே அனைத்து மக்களும் காணப்படுகின்றனர். இதனால், இந்த நாட்டு மக்கள் பூமியில் தான் வாழ்கிறார்களா? அல்லது வேறு கிரகத்தில் எதுவும் வாழ்கிறார்களா? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவின் இன்றைய நிலைமை விளக்கும் வகையில், அதுவும் அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக ஆடை அணிந்திருக்கிறார்கள்? எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்கிறார்கள்? என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உச்சம் தலை முதல், உள்ளங்கால் வரை அனைத்தையும் வெள்ளை நிற ஆடையால் மூடியபடி இருக்கிறார்கள்.

குறிப்பாக, அவர்கள் இரவில் படுத்துத் தூங்கும்போது கூட, இதேபோல், உடம்பில் துளி கூட உடல் பாகம் தெரியாத அளவுக்கு ஆடைகளை உடுத்திக்கொண்டும், முகத்தை நன்றாக முழுமையாக மூடியபடியும், சுவாசிக்க மட்டும் முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் தனியாக அணிந்துகொண்டு, அதன்பிறகே அனைவரும் உறங்குகிறார்கள்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடமிருந்து மேலும், நோய் பரவாமல் தடுக்க, அவர்கள் இறந்தவர்கள் போல் எண்ணி, அவர்களையும் முழுமையாக வெள்ளை நிற ஆடையால் முழுவதும் மூடி, அந்த ஆடையின் மேல்.. பார்ஸ்சலுக்கு ஒட்டப்படும் டேப் போட்டு, ஒட்டி இறந்தவர்கள் போல் காணப்படுகிறார்கள்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும், காண்போரைக் கண்கலங்கச் செய்கிறது. தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.